உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள்

உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள்

டேராடுன் : உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தால் பொருள் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Frightened by the sudden earthquake in Uttarakhand this morning

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை சுமார் 5 மணியளவில் ஏற்பட்ட இந்த லேசான நில நடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் பொருள் இழப்புகளோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் இருபத்தி எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

English summary
Frightened by the sudden earthquake in Uttarakhand this morning, people fled their homes. The quake, which measured 4.1 on the Richter scale, did not cause any damage.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.