ஐபிஎல் 2022: ஏலத்தில் விலைபோகாத சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் 2022 ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. எந்த அணியும் ரெய்னாவை தங்களது அணியில் எடுக்க ஆர்வம் காட்டாததால் அவர் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். இருப்பினும், இன்று 1வது சுற்றில் விற்பனையாகாமல் போன ரெய்னா நாளை 2வது சுற்றில் மீண்டும் ஏலத்தில் வருவார். எனவே, அவரை கடைசி நேரத்தில் எந்த அணியும் தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க | Live: ஐபிஎல் மெகா ஏலம்

சுரேஷ் ரெய்னாவிற்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  முந்தைய சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) அணியின் ஒரு தூணாக இருந்து வந்தார் ரெய்னா.  MS தோனியைப் போலவே, சுரேஷ் ரெய்னாவும் பல ஆண்டுகளாக சி.எஸ்.கே-ன் ஒரு அங்கமாக இருந்தார்.  ஐபிஎல் 2008ல் அறிமுக பதிப்பில் சி.எஸ்.கே-ல் சேர்ந்த ரெய்னா 2021 சீசன் வரை சி.எஸ்.கே அணிக்காக விளையாடினார்.  2016 மற்றும் 2017 சீசன்களில் சிஎஸ்கே தடை செய்யப்பட்டபோது, ​​ரெய்னா குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ரெய்னாவும் ஒருவர். 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்களை எடுத்து தற்போது 4 வது முன்னணி ரன் எடுத்தவர் என்ற பட்டியலில் உள்ளார்.  35 வயதான ரெய்னா 1 சதம் மற்றும் 39 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.  ஐபிஎல் 2008-ல் 421 ரன்களை அடித்தபோது, ​​தனது அறிமுக சீசனிலேயே லைம்லைட்டைப் பெற்றார். அடுத்த சீசனில் அவர் 434 ரன்களை அடித்து, மற்றொரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  2014 சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் ரெய்னா 400 ரன்களைக் அடித்தார்.

2016 மற்றும் 2017 என இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்லுக்கு திரும்பியபோது, ​​​​சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை மீண்டும் எடுத்தது. ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக 2020 சீசனில் இருந்து விலகினார். பிறகு, ஐபிஎல் 2021-ல் அணிக்கு திரும்பினார். இருப்பினும், 12 ஆட்டங்களில் 160 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார்.  ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே அணி ரெய்னாவை விடுவித்தது.  நாளை இரண்டாவது சுற்றில் சிஎஸ்கே அணி ரெய்னாவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.