ஓசூர் மேயரை தீர்மானிக்கும் அந்த சாதி… அதிமுக, திமுக போடும் பலே திட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஓசூர் மாநகராட்சி
, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி ஆகிய 6 பேரூராட்சிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒசூரில் உள்ள 45 வார்டுகளில் 1,11,284 ஆண், 1,05,913 பெண் மற்றும் 95 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,17,292 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நகராட்சியாக இருந்த ஓசூர் கடந்த 2019-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இதனால், எந்த கட்சி மேயர் பதவியை கைப்பற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் பல்வேறு சமூக மக்கள் ஓசூர் மாநகரத்தில் வசித்து வருகின்றனர். ஆனாலும், பெரும்பான்மை சமூகமான கவுடா, ரெட்டி சமூகத்தினர் இடையே எந்த கட்சி என்பதை தாண்டி எந்த சமூகம் என்ற விருப்பம் மேலோங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நெருங்கும் காதலர் தினம்; ஓசூரில் குவியும் ஜோடிகள்!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியை வைத்து ரெட்டி சமூக மக்களின் வாக்குகளை கவர அதிமுக திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் கவுடா சமூக வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக திட்டவட்டமாக உள்ளது.

அதனால் தான், 6-வது வார்டு வேட்பாளராக அறிவிக்கபட்ட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அதிமுக நகர செயலாளராக உள்ள பால் நரசிம்மனை வைத்து கவுடா சமூக மக்களின் வாக்குகளை கவர அதிமுக காய் நகர்த்தி வருகிறது.

திமுகவிற்கு இனி‌ இறங்கு‌ முகம்… கணித்த முன்னாள் அமைச்சர்!

அதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோரை வைத்து எப்படியாவது மேயரை பதவியை கைப்பற்ற வேண்டும் என திமுக வியூகங்களை வகுத்து வருகிறது. கவுடா சமூகத்தை சேர்ந்த ஒருவர் தான் கண்டிப்பாக மேயர் என கட்சி மேலிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், நம் சமூகத்திற்கு நாம் தானே உழைக்க வேண்டும் என்ற பேச்சுடன் எஸ்.ஏ. சத்யா உற்சாகமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.