கல்வி போதித்த காக்கிச் சட்டை! மாணவர்களுக்கு கலக்கலாகப் பாடம் நடத்திய மாவட்ட எஸ்பி.. 'தெறி' வீடியோ

கல்வி போதித்த காக்கிச் சட்டை! மாணவர்களுக்கு கலக்கலாகப் பாடம் நடத்திய மாவட்ட எஸ்பி.. ‘தெறி’ வீடியோ

கள்ளக்குறிச்சி: தேர்தல் பணிகளை ஆய்வு செய்யச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கே மாணவர்களுக்குப் பாடம் நடத்திய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

சென்னை உட்பட மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.

கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 கொரோனா

கொரோனா

வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குத் தேவையான ஆய்த பணிகளைத் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாகச் செய்து வருகிறது.

 எஸ்பி செல்வகுமார்

எஸ்பி செல்வகுமார்

இதற்கிடையே சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டார். அங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த செல்வகுமார், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..

 வகுப்புக்குள் நுழைந்த எஸ்பி

வகுப்புக்குள் நுழைந்த எஸ்பி

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை செல்வகுமார் பார்வையிடும் போது, அங்கு வகுப்புகள் வழக்கம் போல நடந்து வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக எஸ்பி செல்வகுமார், அங்கு 7ஆம் வகுப்பு பாடங்கள் நடைபெற்று வந்த வகுப்பிற்குச் சென்றார். திடீரென வகுப்புக்குள் காக்கி சட்டையில் எஸ்பி வந்ததைக் கண்டு மாணவர்கள் சற்றே குழம்பினர்.

 பாடம் நடத்திய எஸ்பி செல்வகுமார்

பாடம் நடத்திய எஸ்பி செல்வகுமார்

அப்போது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் எஸ்பி செல்வகுமார், அறிவியல் பாடம் நடத்தினார். அதேபோல சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகளுக்குச் சமுக அறிவியல் பாடத்தில் வரைபடத்தைப் பற்றியும் பாடம் நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆக்ஷனில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

English summary
Kallakurichi SP reviews urban local body election arrangements: Tamilnadu urban local body election 2022 latest.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.