கேரளாவில் சொகுசு பேருந்துகளை கிலோ ₹45 ரூபாய்க்கு விற்கும் அவலம்!

திருவனந்தபுரம்: கோவிட்-19 தொற்றுநோய்   பரவல் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொச்சியில் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர் தனது பேருந்துகளை விற்க முடிவு செய்துள்ளார்கள் என ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் சங்கம் (CCOA) தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு உரிமையாளர் பேருந்துகளை கிலோ ரூ.45 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார். கொச்சியில் வசிக்கும் ராய்சன் ஜோசப்பிடம், தொற்று நோய்க் பரவலுக்கு  முன்பாக 20 பேருந்துகள் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 10 பேருந்துகள் மட்டுமே உள்ளன. 40 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்தின் விலை ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

போலீசார் தேவையில்லாமல் தொந்தரவு செய்கின்றனர் என வருத்தமடைந்துள்ள ராய்சன் ஜோசப் இது குறித்து கூறுகையில், ‘நிலமை மிகவும் மோசமாகி விட்டது. நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் பிரச்சனையில் உள்ளோம். எனது அனைத்து பேருந்துகளுக்கும் 44 ஆயிரம் ரூபாய் வரியும், சுமார் 88 ஆயிரம் ரூபாய் காப்பீடும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்  அமலில் இருந்த போது, ​​முன் பதிவு செய்யப்பட்ட பயணத்திற்கு அனுமதி என்று விதிகளில் தெளிவாகக் கூறியிருந்தாலும், கோவளம் பயணத்தின் போது நான் காவல்துறைக்கு அபராதமாக ரூ.2,000 செலுத்த வேண்டியிருந்தது’ என  வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மேற்கு வங்க சட்டசபை முடக்கம்; ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு

பேருந்து உரிமையாளர்களிடம்  எந்த காரணமும் இல்லாமல் பணம் வசூலிக்கப்படுகிறது. காவல் துறையினர் எங்களை துன்புறுத்துகின்றனர் என்றார். இன்றைக்கு வாகனத்தின் பதிவு எண்ண்ணைக் கொண்டு பொத்தானை அழுத்தினால் அதிகாரிகளுக்கு எல்ல தகவல்களும் தெரியும். ஆனால் இதையெல்லாம் மீறி எங்களிடம் காவல் துறையினர் கொள்ளையடிக்கின்றனர் என புகார்கள் எழுந்துள்ளன.

கேரளாவில், 3,500 CCOA உறுப்பினர்கள் உள்ளர். இவர்களில் பலர், பேருந்தை எடைக்கு போட்டு விற்க வேண்டிய கட்டாயத்தில், உள்ளனர், அவர்களிடம் மொத்தம் சுமார் 14,000 பேருந்துகள் உள்ளன. காண்டிராக்ட் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பினு ஜான் இது குறித்து கூறுகையில், சுற்றுலா பேருந்துகள் எடைக்கு விற்பனை செய்வது இது முதல் முறை அல்ல. கடும் சிரமத்தில் உள்ள பலர் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

மாதத் தவணை செலுத்தாததால் எங்களது உறுப்பினர்களின் சுமார் 2000 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டதாக ஜான் தெரிவித்தார். கேரள அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கால்வாசி வரியை தள்ளுபடி செய்துள்ளது, ஒரு காலாண்டில் 50 சதவீதம் தள்ளுபடியும், இரண்டாவது காலாண்டில் காலாண்டு வரியில் 20 சதவீதம் தள்ளுபடியும் பெற்றுள்ளோம். ஆனால் இது இருந்தபோதிலும் எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான சிக்கலில் உள்ளனர். எங்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவை என்றார்.

மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.