கொட்டித் தீர்க்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன் அறிவிப்பை
சென்னை வானிலை
ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், “குமரிக்கடல் பகுதியின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 12.02.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

13.02.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், நீலகிரி, கோவை திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இன்னும் 27 அமாவாசையில் இது நடக்கும்.. ஸ்டாலினுக்கு எடப்பாடி சொன்ன ஜோசியம்!

14.02.2022: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

15.02.2022, 16.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

பதவி உயர்வு வழங்குங்க: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 11, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 10 , பரங்கிப்பேட்டை AWS (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) 8, கொள்ளிடம் (மயிலாடுதுறை), மன்னார்குடி (திருவாரூர்) தலா 7, காட்டுமன்னார்கோயில் (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), சீர்காழி (மயிலாடுதுறை), மணல்மேடு (மயிலாடுதுறை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), . திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 6, சேத்தியாத்தோபு (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்), நன்னிலம் (திருவாரூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 5, பாண்டவையார் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), கொடவாசல் (திருவாரூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்) தலா 4,

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.