கடலூர் மாவட்டத்தில் அடங்கி உள்ள கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் போட்டியிடும்
அதிமுக
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரச்சார கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
இதில் பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
வசமாக மாட்டிய முதல்வர் ஸ்டாலின்; பகீர் தகவல் கூறும் ஓ.பன்னீர்செல்வம்!
முன்னதாக வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு வருகை தந்திருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளின் பெயரை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பட்டியல் தயார் செய்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்து இருந்தார்.
இதை வாங்கி பார்த்த ஓ.பன்னீர்செல்வம் என்ன நினைத்தாரா? அல்லது யார் சொல்லி கொடுத்தார்களோ? தெரியவில்லை. உடனே, ‘வாசிக்க போகும் இந்த பெயர் பட்டியலுக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது. யார்? யார்? பெயர் விடுபட்டிருந்தாலும் நான் பொறுப்பில்லை. கொடுத்த பேப்பரை படிக்கிறேன்’ என அதிரடியாக கூறிவிட்டு படித்து முடித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி; அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள்!
இதை தொடர்ந்து, ‘எனது பெயர் இல்லை.. எனது பெயர் இல்லை..’ என்று அதிமுகவினர் பலரும் ஒவ்வொருவராக ஓ.பன்னீர்செல்வம் முன்பாக கோஷம் எழுப்பியபடி ஆக்ரோஷமாக கத்த தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல தனது நமட்டு சிரிப்புடன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் பலன் தரவில்லை. இந்த எரிச்சலில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடி பேசிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
தமிழக அரசு பாரபட்ச நடவடிக்கை; பத்திரிகையாளர்கள் போர்க்கொடி!
ஓ.பன்னீர்செல்வம் சென்ற மறு நிமிடம் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் இடையே காரசார வாக்குவாதங்கள் எழுந்து கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இரு அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்ற பேச்சு உறுதியாகி இருப்பதாக கூட்டத்துக்கு வந்திருந்த அதிமுக அடிமட்ட தொண்டர்கள் புலம்பியபடி செல்வதை காண முடிந்தது.