திருச்சி: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழியும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், நன்னிலம், செம்பனார்கோவில், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிந்தநிலையில், மற்ற இடங்களில் அறுவடை நடந்து வந்தது. திடீர் மழை காரணமாக அறுவடை பணிகள் பாதித்தது. மயிலாடுதுறை , தஞ்சையிலும் மிதமான மழை பெய்தது.
