தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-லிருந்து ஊரடங்கு செயல்முறை அமலில் இருந்து வருகிறது.  நோய் பரவல் குறையும் நேரத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தும், பரவல் அதிகமானால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தும் அரசு உத்தரவினை பிறப்பித்து வருகிறது.  அந்த வகையில் கடந்த ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பியபொழுது ஒமிக்ரான் பரவலால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

அதனை தொடர்ந்து தற்போது நோய் பரவளின் தாக்கம் படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது.  இந்நிலையில் அரசு சில ஊரடங்கு தளர்வுகளை விதித்து வந்தது.  அரசு அறிவித்தபடி ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு வருகின்ற பிப்ரவரி 15ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதனையடுத்து தமிழகத்தில் சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 50% மட்டுமே பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அனுமதித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 16ம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பாரவையாளர்களை அனுமதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.  மேலும் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற இடங்களில் 50% நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று பிறப்பித்திருந்த உத்தரவையும் அரசு நீக்கியுள்ளது.

இதுதவிர நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்கவும், பொருட்காட்சி நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவில் எவ்வித மாற்றமும் வழங்கப்படவில்லை, மேலும் அரசியல் பொது கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்கிறது.  தமிழகத்தில் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது  மார்ச் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.