தமிழ் பெண்ணை மணக்கும் மேக்ஸ்வேல்

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது. வினி ராமன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வினி ராமன் பதிவிட்டார். அப்போது, மேக்ஸ்வெல்லின் காதலி இவர் என்றும் அரசல்புரசலாக பேசப்பட்டது.

மேலும் படிக்க | CSK -வில் தமிழக வீரர்களுக்கு இடமில்லையா?

இந்நிலையில், அண்மையில் தங்களின் காதலை உறுதிபடுத்திய இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மூன்று ஆண்டு காதல் விரைவில் திருமணத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் வினிராமன் ஆகியோர் பெற்றோருடன் இருக்கும் புகைப்படமும், அவர்களின் திருமணத்துக்காக தமிழில் அச்சிடப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேக்ஸ்வெல்லின் காதலி வினி ரமணியின் குடும்பம் சென்னையை பூர்வீகமாக கொண்டது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் குடும்பம் மெல்பேர்னில் வசிக்கின்றனர். வினி ராமன் மருத்துவராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. மேக்ஸ்வெல்லுகும், வினி ராமனுக்கும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. இணையத்தில் வெளியாகியிருக்கும் அந்த பகைப்படத்தில் இருவரும் ஜோடியாக இருக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விரைவில் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக போவதற்கு, ரசிகர்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே!  

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.