திமுகவில் மீண்டும் ஐக்கியமான கு.க.செல்வம்

திமுகவில் பிரபலமான முகமாக இருந்த கு.க.செல்வம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.கவுக்கு சென்றார். 2020 ஆம் ஆண்டு டெல்லி சென்ற அவர், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

மேலும் படிக்க | கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!

இதனையடுத்து திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த கு.க.செல்வம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.கவுக்காக களப்பணியாற்றினார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் சீட் கொடுக்காததால் பா.ஜ.கவில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும், தான் எம்.ஏல்.ஏவாக இருந்த தொகுதியில் போட்டியிட்ட குஷ்புவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.

தொடர்ந்து அவருக்கான முக்கியத்துவம் ஏதும் பா.ஜ.கவில் இல்லாததால் அமைதியாக இருந்த கு.க.செல்வம், மீண்டும் தாய் கழகமான திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகமான அறிவாலயம் சென்ற அவர், முதலமைச்சர் மு.கஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அவர் கட்சியில் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, கட்சியின் பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.  

மேலும் படிக்க | கோவிலில் என்ன அணியனும்னு ஆகமத்தில இருக்கா? கண்டித்த நீதிபதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.