சேலம்: தேர்தல் நடத்தை விதிக்க அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பணம், சேலை உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பிரதான சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஞானராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.1,12,140 பணத்தை பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்டம் தாராமங்கலத்திலிருந்து ஓமலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற 250 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்துனர் அலுவலரிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை 8-வது வார்டு அதிமுக வேட்பாளர் சிவசங்கரி மக்களுக்கு சேலை வழங்க இருந்ததாக கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. எனவே பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் சிவசங்கரியின் வெள்ளி கடையிலிருந்து 340 சேலைகளை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சிவசங்கரி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
