தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் – உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!

தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் – உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!

By Logi

டேராடூன்: தேவபூமியான உத்தரகாண்டை பாஜகவால் மட்டுமே பாதுகாக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

  தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் – உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!

  உத்தரகாண்ட் மாநிலத்தில் 14ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக் ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

  பிரதமர் மோடி

  பிரதமர் மோடி

  உத்தரகாண்ட் ருத்ராபூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில்,” இந்தியாவை ஒரு தேசமாக கருதுவதற்கு கூட காங்கிரஸ் தயாராக இல்லை. உத்தரகாண்டின் தேவபூமியின் தெய்வீகத்தை பாஜக பாதுகாக்கும். இந்த மாநிலத்தின் தெய்வீகத்தைப் பாதுகாக்க எங்களால் முடியும்” என்று தெரிவித்தார்.

  வளர்ச்சி

  வளர்ச்சி

  கொரோனா சமயத்தில் இலவச ரேஷன் மற்றும் பல திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு ஆதரவளித்தது பாஜக. இதுவே மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்திருந்தால் ஊழல் நடந்திருக்கும். நாங்கள் இங்கு நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உருவாக்குகிறோம். ‘பர்வத் மாலா’வின் கீழ், தேசிய ரோப்வே மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தொலைதூரப் பகுதிகளில் ரோப்வே இணைப்பு வழங்கப்படும்.

  கல்லூரிகள்

  கல்லூரிகள்

  பல பெங்காலி குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்ட வங்காளிகளின் சாதிச் சான்றிதழில் இருந்து ‘பூர்வி பாகிஸ்தான்’ என்ற குறிப்பை நீக்க முடிவு செய்த புஷ்கர் சிங் தாமிக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  அமித்ஷா

  அமித்ஷா

  உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சியை காங்கிரஸால் செய்ய முடியாது. பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றினார். காங்கிரஸ் ஆட்சியின் போது மாநிலம் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்தது. இப்போது ‘மௌனி பாபா’ மன்மோகன் சிங் நாட்டின் பிரதமர் அல்ல. தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார் என உத்தரகாண்ட் பிரசாரட்தில் பேசினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.

  English summary
  BJP will secure the ‘Devatava’ (divinity) of Devbhoomi Uttarakhand: PM Modi speaking at a public rally in poll-bound Uttarakhand

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.