பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்

ஆட்டோ மொபைல் துறையில் பஜாஜ் நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக உயர்த்திய ராகுல் பஜாஜ் 1938 ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி பிறந்தார். பொருளாதாரம் மற்றும் சட்டம் பயின்ற அவர், 1965 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின் பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதால், பஜாஜ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது.

மேலும் படிக்க | மேற்கு வங்க சட்டசபை முடக்கம்; ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு

5 தலைமுறைகளைக் கடந்து பஜாஜ் நிறுவன குழும தலைவராக இருந்த ராகுல் பஜாஜ், 2021 ஆம் ஆண்டு சேர்மன் பதவியில் இருந்து விலகினார். பின்னர், நீரஜ் பஜாஜிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். வயது முதிர்வு காரணமாக நிறுவன தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். இவரின் தொழில் பங்களிப்புக்காக 2001 ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 

அவர் பஜாஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுபேற்கும்போது, இந்த பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ராகுல் பஜாஜ், வியாபார யுக்தியினால் மார்கெட்டில் பஜாஜின் பெயரை உச்சம் தொட வைத்தார். இந்திய ஆட்டோமொபைல் துறையில் தனக்கென தனி இடம் ஒன்றை பஜாஜ் உருவாக்கிக் கொண்டதற்கும் இவரே காரணம். 1960-களில் சுமார் 3 கோடி ரூபாயாக இருந்த ஆண்டு வருவாய் ஏறத்தாழ 35 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. இதற்கு ராகுல் பஜாஜின் சிறப்பான நிர்வாகத் திறமையே காரணம். இதயப்பிரச்சனையால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ராகுல் பஜாஜ் இன்று காலமானார். இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.