பீஸ்ட் படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் – இத்தனை கோடிகளா?

நெல்சன் திலீப்குமார் – இளையதளபதி விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’பீஸ்ட்’. ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சார்கார் திரைப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம், பீஸ்டையும் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க | ரஜினி-விஜய்-எஸ்கே-வை ஒரே மேடையில் ஏற்றிய நெல்சன்..!

அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் சிங்கிள் அறிவிப்புக்காக யூடியூப்பில் வெளியிடப்பட்ட புரோமோ மட்டும் சுமார் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இளைய தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்தப் பாடலை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், பீஸ்ட் ஹீரோயினாக நடித்த பூஜா ஹெக்டேவுக்கு, இப்படத்தில் நடித்தற்காக வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | வலிமை இயக்குநர் வினோத்துக்கு போனிக்கபூர் அனுப்பிய மெசேஜ்

தெலுங்கில் சுமார் 2 கோடி ரூபாய் பெற்று வந்த அவருக்கு பீஸ்ட் படத்தில் 3.5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த அவர், அதன்பிறகு தெலுங்கு திரையுலகுக்கு சென்றார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, தெலுங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு திரும்பிய அவர், பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம். விஜய் படம் என்றவுடன் ஓகே சொன்ன அவருக்கு, இவ்வளவு தொகை சம்பளமாக கிடைத்ததையடுத்து மகிழ்ச்சியுள்ளாராம். 

மேலும் படிக்க | கார்த்தியின் ’சர்தார்’ படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.