வாகனம் ஓட்டும் போது போனில் பேசுவது குற்றம் ஆகாதா; நிதின் கட்கரி கூறியது என்ன!

வாகனம் ஓட்டும் போது ஏற்படும் எவ்வித கவனக்குறைவினால் விபத்து ஏற்படலாம் என்பதால், வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வாகனத்தை  ஓட்டும் போது தொலைபேசியில் பேசுவது விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனம் ஓட்டும் போது போனில் பேசுவது இனி குற்றமாகாது என்றார். இருப்பினும், இதில் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். இந்த அறிவிப்பு மக்களவையில் வெளியானது.

வாகனத்தை ஓட்டும் போது போனில் பேசுவதற்கு, ப்ளூடூத் போன்ற ஃபோன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், போனை காரில் வைக்காமல் பாக்கெட்டில் வைக்கத்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | டாடாவின் இந்த ஃபாமிலி காரில் பம்பர் தள்ளுபடி: சூப்பர் வாய்ப்பு, மிஸ் செஞ்சிடாதீங்க

மத்திய அமைச்சர் இது குறித்து மக்களவையில் தெரிவிக்கையில், “ஓட்டுனர் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கருவியைப் பயன்படுத்தி, தொலைபேசியில் பேசினால், அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது. இது போன்ற சூழ்நிலையில், போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க முடியாது. அப்படி அபராதம் விதித்தால், அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம்.” என்றார்.

மேலும் படிக்க | Cheapest Bikes: நாட்டின் மிக மலிவான, சூப்பர் மைலேஜ் கொண்ட டாப் பைக்குகள் இவைதான்

தொலைபேசியில் பேசியதற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

இந்த தளர்வு நடவடிக்கை,  ஓட்டுநர்களுக்கு சிறிது உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில், சாலை விபத்துகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் குறிக்கோளுடனே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Optima: மகிந்திராவும் ஹீரோவும் இணைந்து வழங்கும் மிக மலிவான மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.