விக்ரமின் 'கோப்ரா' படத்தின் முக்கிய அப்டேட்!

ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘கோப்ரா’.  சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகபோகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  

மேலும் படிக்க | விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.  இதில் அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.  இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் விக்ரம்  தனக்கான காட்சிகளை நடித்து முடித்த நிலையில் கிரிக்கெட் வீரரும், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் பதான் அவருக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.  

irfan

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட இர்பான் பதான் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.  அதில், “இர்பான் சார் உடன் இறுதிநாள் ஷூட், உங்களைப் போன்ற அன்பான மற்றும் அன்பான நபரை சந்தித்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி.  இது ஒரு மறக்கமுடியாத பயணம்” என்று பதிவிட்டுள்ளார்.  

 

இப்படத்தில் நடித்தது குறித்து இர்பான் பதான் கூறுகையில்,  “முதன்முறையாக தமிழ் சினிமாவில் எனக்கு இந்த அற்புதமான பயணத்தை அளித்ததற்கு நன்றி.  எனது முதல் படத்திலேயே உங்களை போல சிறந்த குழு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.  பெரிய திரை வழியாக கோப்ராவில் அஸ்லானை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.