ஹிஜாப்: உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16 வரை விடுமுறை

கர்நாடகாவில், அரசு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவிகள் பலர் ஹிஜாப் (Hijab) அணிந்து வரத் தொடங்கினர். அதற்கு எதிர்வினையாக முஸ்லிம் அல்லாத மாணவ-மாணவிகள் காவி நிறை துண்டுகளை உடுத்தி கல்லூரிக்கு வர ஆரம்பித்த நிலையில் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு  அரசு விடுமுறை வழங்கியது. மேலும், மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மறு தீர்ப்பு வரும் வரை சீருடை  மட்டுமே அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும், எனவும், ஹிஜாப், காவித் துண்டு போன்றவற்றை அணிய தடை எனவும் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர்.  எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

கர்நாடகாவில் அதிகரித்து வரும் ஹிஜாப் சர்ச்சையை கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் தொடர்பாக மாநில அரசு சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன் கீழ், 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு முதல் அனைத்துப் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வரையிலும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை – தீவிரமடையும் போராட்டங்கள்!

வெள்ளிக்கிழமை, முதல்வர் பொம்மை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் முதல்வர் வெளியிட்டார். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மாவட்டங்களுக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.