அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

சேலம்: சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 4வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் நடராஜ். இவர் கடைசி நாளில் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மேச்சேரி 4வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர்கள் சின்னதம்பி, மகிபாலன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒபுளிசெட்டியார், சேகர், சிவசங்கர், ராஜா, தியாகராஜன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.