உக்ரைனில் இருந்து வெளியேறும் அமெரிக்க துாதரக அதிகாரிகள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க துாதரக அதிகாரிகள் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. அத்துடன் அண்டை நாடான பெலாரசில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், உக்ரைனின் இருபுறம் உள்ள கடல் பகுதியில் ரஷ்யா தன் போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் உள்ள தங்கள்நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஏற்கனவே உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் வெளியேறுமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துஉள்ளது. இதையடுத்து, அமெரிக்க துாதரக அதிகாரிகள் தங்கள் குடும்பங்களுடன், அண்டை நாடான போலந்து எல்லைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news

இதற்கிடையே அமெரிக்கா மேலும், 3,000 ராணுவத்தினரை போலந்துக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே போலந்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் 1,700 பேருடன் இணைய உள்ளனர். இரு நாட்களில் போர்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது அடுத்த வாரம் போர் தொடுக்க தன் ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் கூட போர் துவங்கலாம். அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும்.ஜேக் சுல்லிவன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமெரிக்கா

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.