பெங்களூருவில் நடைபெற்ற முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, இஷான் கிஷனை 15.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் என பெருமையை பெற்றார். 8-க்கும் மேற்பட்ட வீரர்கள் 10 கோடிக்கும் மேலாக ஏலம் எடுக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்
தமிழக வீரர் ஷாருக்கானை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. 9 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஷாருக்கானை எடுக்க சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 20 லட்சம் ரூபாயில் தொடங்கிய ஏலம், படிப்படியாக உயர்ந்தது. சென்னை அணி 8 கோடி ரூபாய் வரை மோதிப்பார்த்தது. ஆனால், பஞ்சாப் விடுவதாக இல்லை. கடைசியாக 9 கோடிக்கு ஷாருக்கானை பஞ்சாப் தன்வசப்படுத்தியது. இதனால், சென்னை அணிக்கு ஷாருக்கான் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பேட்டிகளில் பேசிய அஸ்வின் சென்னை அணிக்கு திரும்ப விருப்பம் உள்ளதாக கூறினார். சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அணிக்காக விளையாடுவது என்பது ஆசை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அவரை ஏலம் எடுக்க சென்னை அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை ஒரு முறைகூட அஸ்வினுக்காக சென்னை அணி ஏலம் கூறவில்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம் – மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ்
மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி 5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரை ஏலம் எடுக்க சென்னை ஆரம்ப கட்டத்தில் முயற்சி செய்தது. 5 கோடி ரூபாயைக் கடந்ததும் தினேஷ் கார்த்திக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தமிழக வீரர்களை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டாதது ஏன்? என்று வினவியுள்ளனர்