கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார். தற்போது இவர் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் மார்ச் 25ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் SK20 படப்பிடிப்பு!
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 10ம் தேதி காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அடுத்ததாக படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி பகுதியில் நடக்கவிருக்கிறது, மேலும் படத்தின் சில முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி மற்றும் பிரேம்ஜி நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இப்படம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகையான ஒலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒலிவியா மோரிஸ் தற்போது SS.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். NTR, ராம் சரன், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடித்திருக்கும் இந்த படம் வரும் மார்ச்-25ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ‘SK20’-ல் சிவகார்த்திகேயனுக்கு, ஜோடியாக ஒலிவியா மோரிஸ் நடிக்கப்போவது குறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?