ஆன்லைனில்..10, 12ம் வகுப்பு வினாத்தாள்; அதிர்ச்சியில் உறைந்த பள்ளி கல்வி துறை!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தும் வகையில்
திருப்புதல் தேர்வு
நடத்தப்படுகிறது.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் இபிஎஸ்; பறையடித்து சொன்ன திருமாவளவன்!

அந்த வகையில் நாளை 10ம் வகுப்புக்கு அறிவியில் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 12ம் வகுப்பிற்கு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் நடைபெற இருக்கிறது.

விஜயகாந்துக்கு வந்த திடீர் சிக்கல்; கவலையில் தேமுதிக தொண்டர்கள்!

இந்த சூழ்நிலையில இரண்டு தேர்வுக்கான வினாத்தாள்களும் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் லீக் ஆகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து 10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு லீக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளியான வினாத்தாள்

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வு நடைபெற்றாலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பிரிண்ட் செய்யப்படுவதால் இதுபோல் லீக் ஆகும் சம்பவங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

காதலர் தினம்… போலீஸ் திடீர் உத்தரவு; காதல் ஜோடிகள் ஷாக்!

தற்போது தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வினாத்தாள்கள் பரவி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் சூழலில் இதை பகிர்பவர்கள் மீது உடனடியாக
பள்ளி கல்வி துறை
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக செய்யாறு காவல் துறையில் திருவண்னாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்து இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.