உலக வானொலி தினத்தில் ‘மக்களை இணைக்கும் அற்புதமான ஊடகம்’ என பிரதமர் வாழ்த்து

உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது என்றும் மக்களை இணைக்கும் அற்புதமான ஊடகம் என்றும் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபை  பிப்ரவரி 13ம் தேதியை சர்வதேச தினமாக ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த நாள் உலக வானொலி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

“அனைத்து வானொலி நேயர்களுக்கு, இந்த சிறந்த ஊடகத்தை தங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலால் வளப்படுத்துபவர்களுக்கும் உலக வானொலி தின வாழ்த்துக்கள்” என்று மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீட்டிலும், பயணங்களின் போதும், தொலை தூர பகுதிகளிலும், வானொலி மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே உள்ளது என்றார். மக்களை இணைக்க இது ஒரு அற்புதமான ஊடகம் என்று பிரதமர் கூறினார்.

“மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம், நேர்மறை தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கும், மற்றவர்களின் வாழ்க்கையில் தரமான மாற்றத்தைக் கொண்டு வருவதில் அரும் பங்காற்றுபவர்களை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறந்த ஊடகமாக வானொலி எனக்கு இருந்து வருகிறது என்பதை நான் மீண்டும் மீண்டும் உணர்கிறேன். அந்த வகையில் அந்த நிகழ்ச்சிக்காக பங்காற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ” என்று மோடி கூறினார்.

மேலும் படிக்க | PF New Rules: ஏப்ரல் 1 முதல், PF கணக்கில் பெரிய மாற்றம் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.