சட்டப்பேரவை முடக்கம்? – முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் விளக்கம்!

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு, ஆளுநர் ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

பிப். 19 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளமான ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 11 ஆம் தேதி மாலை மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, அரசு கேட்டுக் கொண்டதையடுத்து சட்டப்பேரவையை முடித்து வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை என்றும், மாநில அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்றும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.