தமிழ்நாட்டிலும் சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கலாம்: திமுகவுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

மேற்குவங்க மாநிலத்தில் அம்மாநில ஆளுநருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், அம்மாநில சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து மம்தா பானர்ஜி அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்கத்தை போன்று தமிழ்நாட்டிலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், “மேற்குவங்கத்தில் ஆளுநர் சட்டசபையையே முடக்கி உள்ளார். தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் நிலவும்.
திமுக
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுகவை எதிர்கொள்ளும் திராணி திமுகவிற்கு இல்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது இருக்கும் திமுகவிற்கு பலம் இல்லை. தேர்தலை அறிவித்து விட்டார்கள். நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தானே முதல்வருக்கு அழகு. நான் முதல்வராக இருக்கும் போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அப்படித்தானே செய்தேன். நாங்கள் எதிர்கட்சியினரை, மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே. அந்த தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பங்களில் ஈடுபட திமுகவினர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

திமுகவை ஆஃப் செஞ்ச ஈபிஎஸ்; சேலத்தில் நடக்கப் போகும் பெரிய சம்பவம்!

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நேர்மையாக தேர்தலை நடத்தாவிட்டால் நாங்கள் நடத்த வைப்போம். தேர்தல் பணிகளை அதிகாரிகள், போலீசார் நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்பட கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும்
அதிமுக
ஆட்சிக்கு வருவது உறுதி என்றார்.

திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக சொன்னதை செய்யப் போவதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி அப்போது விமர்சித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.