திமுக குடும்பத்துக்கு திகார் சிறை; வேற லெவலுக்கு இறங்கிய சீமான்!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
சீமான்
தலைமையில் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஓபிஎஸ் கூட்டத்தில் கதறி அழுத பெண் நிர்வாகி; இதாங்க காரணம்!

இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பது சர்வாதிகார போக்கு.

ஆன்லைனில்..10, 12ம் வகுப்பு வினாத்தாள்; அதிர்ச்சியில் உறைந்த பள்ளி கல்வி துறை!

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகதான் தேர்தல் ஆணையம் செயல்படும். அதிமுக ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆட்கடத்தல் நடக்கவில்லை.

தற்போது
திமுக
ஆட்சியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கருத்துரிமையை முடக்குகிறாகள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது.

ஒரு மாநில தேர்தலையே பல கட்டமாக நடத்துகிறார்கள். ஒரு மாநிலத்தில் பிரச்சனை என்றால் அந்த மாநிலத்தில் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்த முடியுமா?

விஜயகாந்துக்கு வந்த திடீர் சிக்கல்; கவலையில் தேமுதிக தொண்டர்கள்!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானில் வாக்கு சீட்டில் தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அமைப்பு முறையில் சீர் திருத்தம் செய்வதைவிட்டு விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் என சொல்கிறார்கள்.

பாஜகவை எதிர்த்து திமுக குரல் கொடுத்தால், திமுக குடும்பத்தில் பல நபர்கள் திகார் சிறையில் தான் இருக்க வேண்டும். மத அடையாளங்கள் உடன் பள்ளிக்கு வரக்கூடாது என சொல்கிறார்கள். ஆனால் மத அடையாளங்களுடன் சட்டமன்றம் பாராளுமன்றத்திற்கு செல்வது என்ன நியாயம்?

மேற்குவங்கத்தை போல தமிழகத்தின் சட்டமன்றமும் முடக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது அவருக்கான ஆசை. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று நடக்கும் ஆட்சியை கலைக்க எந்த முகாந்திரமும் தமிழகத்தில் இல்லை.

இது..ஸ்டாலின் ஆட்சி இல்லை; நாஞ்சில் சம்பத் ‘மாஸ்’ பேச்சு!

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 6 மாதத்தில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் சொன்னதைபோல் இப்போது எடப்பாடி பழனிச்சாமியும் சொல்கிறார். தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் செயல்படுகிறார்கள்.

பறக்கும் படை அதிகாரிகள் கஷ்டப்பட்ட, பாவப்பட்ட நபர்களிடம் மட்டுமே சோதனையை நடத்துகிறார்கள். ஆர்கே நகரில் 80 கோடி காசு கொடுத்தார்கள் என்று சொல்லி தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தல் நடந்தபோது புகாருக்கு உள்ளானவரே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

தேர்தலில் பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என சட்டம் கொண்டு வர வேண்டும். நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. அதனால் தான் எங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை கடத்துகிறார்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.