பிப். 13: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,02,916 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 2,296 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,36,262 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,32,95,789 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,383 பேர் ஆண்கள், 913 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,05,568 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,30,656 ஆகவும் அதிகரித்து உள்ளது. 8,229 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,56,648 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவுக்கு அடுத்த நெருக்கடி – சாட்டையை சுழற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி?

11 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 4 பேரும் , அரசு மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,915 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக இருந்த நிலையில் இன்று 461 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.