பிரான்ஸ் அதிபரை 20 அடி தூரத்தில் உட்கார வைத்து பேசிய புதின்.. காரணம் என்ன?.. சர்ச்சையான புகைப்படம்!

பிரான்ஸ் அதிபரை 20 அடி தூரத்தில் உட்கார வைத்து பேசிய புதின்.. காரணம் என்ன?.. சர்ச்சையான புகைப்படம்!

மாஸ்கோ: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை 20 அடி தூரத்தில் உட்கார வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உரையாடியது ஏன் என்பதற்கு ரஷ்யா விளக்கமளித்துள்ளது.

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.

ஆனால் உக்ரைன் மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வலுக்கும் மோதல்

வலுக்கும் மோதல்

இதைத் தொடர்ந்து உக்ரைன்- ரஷ்யா இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயலுவதாக குற்றம்சாட்டுகிறது. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

பதற்றமான சூழல்

பதற்றமான சூழல்

எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வேண்டாம் என ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. ஆனால் எந்த சமாதானத்தையும் ரஷ்யா ஏற்கவில்லை.

உக்ரைன் மீது போர்

உக்ரைன் மீது போர்

இன்னும் இரு தினங்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கணித்துள்ளன. எனவே அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என பல நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இம்மானுவேல் மேக்ரான்

இம்மானுவேல் மேக்ரான்

அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த திங்கள்கிழமை மாஸ்கோவுக்கு சென்று புதினை சந்தித்து பேசினார். அப்போது வழக்கத்துக்கு மாறாக நீண்ட மேஜையில் ஒரு புறத்தில் மேக்ரானும் மறுபுறத்தில் விளாடிமிர் புதினும் அமர்ந்து கொண்டு உரையாடினர். இருவருக்கும் இடையே 6 மீட்டர் அதாவது 20 அடி இடைவெளி இருந்திருக்கும்.

புகைப்படம் சர்ச்சை

புகைப்படம் சர்ச்சை

இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேக்ரான் பிரான்ஸ் அதிபர் என்றும் பாராமல் அவரை புதின் வேண்டுமென்றே அவமானப்படுத்தியுள்ளார் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை யார் பார்க்க வந்தாலும் அவர்கல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

ஆனால் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கொரோனா பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார். அதனால்தான் 20 அடி தூர மேஜையில் ஒரு முனையில் மேக்ரானும், மறு முனையில் புதினும் அமர்ந்து கொண்டு உரையாடினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில் புதினுடன் மேக்ரான் அருகே உட்காருவதற்கு அவர்கள் போட்ட கண்டிஷன்களை (கொரோனா டெஸ்ட்) நாங்கள் ஏற்கவில்லை. அதனால் ரஷ்யாவின் கொரோனா விதிகளை பயன்படுத்தி 20 அடி தூரத்தில் அமர்ந்து பேசுவதற்கு ஒப்புக் கொண்டோம் என்றார்.

சளி மாதிரி மூலம் டிஎன்ஏ

சளி மாதிரி மூலம் டிஎன்ஏ

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மூக்கில் சளி மாதிரி எடுப்பதன் மூலம் மேக்ரானின் டிஎன்ஏவை மற்ற நாட்டினர் கண்டறிவதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் கொரோனா சோதனைக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள். இதுகுறித்து பிரான்ஸ் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

20 அடி தூரம்

20 அடி தூரம்

இதுகுறித்து புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்டி பெக்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் கொரோனா பரிசோதனையை எடுக்க மறுத்தால் புதின் உடல்நிலையை பாதுகாக்க அவர்களை 20 அடி தூரத்தில் உட்கார வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சில நேரங்களில் புதினை சந்திக்க வரும் விருந்தினர்களுடன் நெருக்கமாக உட்கார்ந்து பேசுவார். கைகளை குலுக்கிக் கொள்வார்.

நாற்காலிகள்

நாற்காலிகள்

சில நேரங்களில் 6 மீட்டர் தொலைவில் உட்காரவைத்து பேச வேண்டியுள்ளது. இது மற்ற நாட்டு தலைவர்கள் அவர்களுடைய விதிகளை கடைப்பிடிப்பதால்தான். ஹோஸ்ட் எடுக்கும் கொரோனா பரிசோதனைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். இதை நாங்களும் புரிந்து கொள்கிறோம். இது உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறைதான். ஆனால் பிரான்ஸ் நாட்டு அதிபர் விவகாரத்தில் அதிபரின் உடல்நிலையையும் விருந்தினரின் உடல்நிலையையும் பாதுகாக்க கூடுதல் விதிகளை பின்பற்றுகிறோம். அதனால் 20 அடி தூரத்தில் நாற்காலிகள் போடப்பட்டு ஆலோசனை நடந்தது என்றார்.

English summary
Why did French President sit 20 feet away from Russian President Vladimir Putin?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.