பூமியை போலவே வாழ தகுதியான 60 கிரகங்கள் கண்டுபிடிப்பு!

பூமியை தவிர மற்ற கிரகங்கள் வாழ்வதற்கு தகுதியானதா என்பதை கண்டறிவது வானவியலின் மிகவும் சவாலான மற்றும் அற்புதமான அம்சங்களில் ஒன்றாகும்.  ஒரு நாளாவது வாழக்கூடிய வகையில் அமைந்துள்ள கிரகங்களை அடையாளம் காண விஞ்ஞானிகள் நீண்டகாலமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த இலக்கை மனதில் கொண்டு, இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழு – இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் இணைந்து 5000 கிரகங்களில், வாழக்கூடிய தகுதியுடைய 60  கிரகங்களை கண்டறிந்து இருக்கின்றனர்.  இவற்றை கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவிபுரிந்தது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மல்டி-ஸ்டேஜ் மெமெடிக் பைனரி ட்ரீ அனோமலி ஐடென்டிஃபையர் (MSMBTAI – Multi-Stage Memetic Binary Tree Anomaly Identifier ) என்ற முறைதான்.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய இந்த முறையானது மல்டி-ஸ்டேஜ் மெமெடிக் அல்காரிதம் (MSMA- multi-stage memetic algorithm ) என்ற நாவலின் வழியாக ஒரு ஒழுங்கற்ற தன்மையை கண்டறியும் முறையை அடிப்படையாகக் கொண்டது.  அல்காரிதம் ஒரு கிரகம் வாழ்விடத்திற்கு தகுதியானதாக இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கான ஸ்கிரீனிங் கருவியாக செயல்படுகிறது.  விஞ்ஞானிகளின் கருத்துப்படி பூமியானது ஒரு ஒழுங்கற்ற தன்மையுடன் உள்ளது, இதுவரை ஆய்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கிரகங்களில் இது மட்டுமே வாழக்கூடிய கிரகமாக கண்டறியப்பட்டுள்ளது.

How on Earth did life start- Astronomy Ireland

அண்டவெளியில் பூமியை போலவே வாழத்தகுதியான கிரங்கள் உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தபொழுது வியக்கத்தக்க வகையில் 60 கிரகங்களில் ஒரே மாதிரியான முரண்பாடுகள் காணப்பட்டது.  கிரகங்களின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை இல்லாமலும் ஆய்வு செய்யப்பட்டதில் இரண்டு செயல்முறையிலும் ஒரே மாதிரியான முடிவுகளே கிடைத்தது.  இந்த கிரகங்கள் வாழத்தகுதியானவை மற்றும் இவற்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.  மேலும் அண்ட வெளியில் மொத்தம் 8,000 கிரகங்கள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் (IIA-Indian Institute of Astrophysics), பெங்களூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பிட்ஸ் பிலானியின்(BITS Pilani) கோவா வளாகத்தைச் சேர்ந்த இளங்கலை மாணவர் கார்த்திக் பாட்டியா மற்றும் அதே கல்லூரியில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற ஜோதிர்மாய் சர்க்கார் ஆகியோர் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.