'மகான்' படத்தின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய படக்குழு!

எந்தவிதமான சவாலான கதாபாத்திரத்தையும் துணிச்சலாக ஏற்று சிறப்பாக நடிப்பவர் நடிகர் விக்ரம்.  இவரை மீண்டும் புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள படம் ‘மகான்’.  பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற  சிறப்பான படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’.  இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த், தீபக் ரமேஷ், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் முக்கிய அப்டேட்!

ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு உருவான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, இப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் பிப்ரவரி 10ம் தேதி வெளியானது.

mahaan

இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆசைப்பட்ட விக்ரம் ரசிகர்களுக்கு, இவ்வாறு OTT-ல் வெளியானது ரசிகர்களிடையே வருத்தத்தை அளித்தது.  இருப்பினும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது, ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் படம் அமைந்துள்ளது.  இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்து படத்தை சிறப்பாக தயாரித்துள்ளதாக பாராட்டினார், இவரின் பாராட்டு இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.  மேலும், விஜய்யும் மகான் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.  இந்நிலையில் ‘மகான்’ படத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கோலாகலாமாக கொண்டாடியுள்ளனர்.

mahaan

மேலும் படிக்க | ‘மகான்’ படத்தை பாராட்டிய பிரபலம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இயக்குனர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.