ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல சில வீரர்கள் அதிக விலைக்கும், சில வீரர்கள் ஏலம் போகாமலும் இருந்தனர். இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் போன்றோர் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் முதல் நாளில் சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனார். 97 வீரர்களில் மொத்தம் 74 பேர் முதல் நாளில் விற்கப்பட்டனர். கடந்த 11 சீசன்களாக சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் 350 ரன்களுக்கு குறையாமல் அடித்து வந்த ரெய்னா கடந்த சீசனில் 12 போட்டிகளில் 160 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார்.
மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK
மெகா ஏலத்தின் முதல் நாளில் விற்பனையாகாமல் போன சுரேஷ் ரெய்னா உட்பட பல்வேறு இந்திய வீரர்கள் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். சிஎஸ்கே கூட ரெய்னாவை அணியில் எடுக்க வில்லை. அவர் 12 ஐபிஎல் சீசன்களில் 11ல் சி.எஸ்.கே-காக விளையாடினார். 2016 மற்றும் 2017 இல் சிஎஸ்கே போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அவர் இரண்டு சீசன்களில் குஜராத் லயன்ஸில் இருந்தார்.
என்னைப் பொறுத்தவரை, இது ஏலத்தின் ஒரு சோகமான தருணம். ஆனால் இரண்டாம் நாளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இறுதியில் சிஎஸ்கே அவரை வாங்கினாலும், ரெய்னாவுக்கு உள்மனதில் சிறு தயக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு சீசனிலும் அவர் சிறப்பாக விளையாடி உள்ளார். மிஸ்டர் ஐபிஎல் ஆகா இருந்த ரெய்னாவை எந்த அணியும் வாங்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஹர்பஜன் கூறினார்.
சி.எஸ்.கே அணி இதுவரை வாங்கியுள்ள வீரர்கள்:
டுவைன் பிராவோ – 4.4 கோடி
ராபின் உத்தப்பா – 2 கோடி
அம்பதி ராயுடு – 6.75 கோடி
தீபக் சாஹர் – 14 கோடி
கே.எம்.ஆசிப் – 20 லட்சம்
துஷார் தேஷ்பாண்டே – 20 லட்சம்
சிவம் துபே – 4 கோடி
மகேஷ் தீக்ஷனா – 70 லட்சம்
மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்