ஹிஜாப் சர்ச்சை: உடுப்பியில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்

உடுப்பி: ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில், கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 19 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில்  144வது பிரிவின் கீழ் தடை விதித்துள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள இடங்கள் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படும். ஊர்வலம் மற்றும் கோஷங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்கப்படும்.

உடுப்பி மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவு பிப்ரவரி 14ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின்படி, உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது தடைசெய்யப்படும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தவும் தடை விதிக்கப்படும். கோஷம் எழுப்பவோ, பாடல்கள் பாடவோ, உரை நிகழ்த்தவோ கடுமையான தடை விதிக்கப்படும்.

திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 144 அமலுக்கு வந்த பிறகு, உருவ பொம்மைகளை எரித்தல், பட்டாசு வெடித்தல், ஆயுதங்கள் மற்றும் கற்களை எடுத்துச் செல்வது அல்லது கட்டி மிரட்டுவது, பொது இடங்களில் இனிப்புகள் வழங்குவது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது ஆகியவை தடை செய்யப்படும்.

மேலும் படிக்க | ஹிஜாப்: உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16 வரை விடுமுறை

கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்து வர ஆரம்பித்து விட்டதாக பள்ளி அதிகாரிகள் கூறுகின்றனர். மாணவிகள் ஹிஜாப் அணியாமல் வகுப்புக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதற்கு எதிர்வினையாக முஸ்லிம் அல்லாத மாணவ-மாணவிகள் காவி நிறை துண்டுகளை உடுத்தி கல்லூரிக்கு வர ஆரம்பித்த நிலையில் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு  அரசு விடுமுறை வழங்கியது. மேலும், மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மறு தீர்ப்பு வரும் வரை சீருடை  மட்டுமே அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும், எனவும், ஹிஜாப், காவித் துண்டு போன்றவற்றை அணிய தடை எனவும் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை – தீவிரமடையும் போராட்டங்கள்!

 கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர்.  எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.