ரூ.1 கோடி சம்பளமா.. காதலர் தினத்தில் கூகுளில் காலடி வைக்கும் சம்ப்ரிதி.. !

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரம், தேவைக்காக வேலை தேடி அலைகின்றனர். பல லட்சம் பேர் இண்டர்வியூவில் கலந்து கொள்கின்றனர். எனினும் இவர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்தமான வேலை அமைகின்றதா? என்றால் நிச்சயம் இல்லை.

வேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பலரும் தங்களது வேலையினை செய்து கொண்டுள்ளனர். நம்மில் எத்தனை பேர் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்கின்றனர்.

நிச்சயம் ஓரு சிலரே இருப்பர். சிலர் பிடிக்காவிட்டாலும் குடும்ப நலன் கருதி வேலையை விடாமல் தொடர்ந்து கொண்டு இருப்பர். அதே சமயம் பிடித்தமான வேலைக்காக எந்த முயற்சியும் எடுத்திருக்கமாட்டார்கள்.

தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் வாய்ப்பு..!

பயமே காரணம்

பயமே காரணம்

இதற்கு காரணம் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம். ஆனால் எத்தனை முறை தோல்வியடைந்தாலும், இறுதியில் வெற்றி பெற்றே தீருவேன் என்ற இலட்சிய இலக்கினை நோக்கில் ஓடுபவர்கள் சிலரே. பெரியளவில் எதிர்பார்ப்புகள் இலக்குகள் , இலட்சியம் என்று இருக்கும்போது, இண்டர்வியூ தோல்வி, அலுவலக பிரச்சனை என எதற்கு அஞ்சாமல் துவண்டு போகாமல் இருக்க வேண்டும்.

சிறந்த உதாரணம்

சிறந்த உதாரணம்

அவர்களே எதிர்காலத்திலும் மிகப்பெரிய வெற்றியாளர்களாகவும் இருப்பர். அதற்கு உதாரணம் தான் பிப்ரவரி 14 அன்று கூகுள் நிறுவனத்தில் பணியில் அமரப்போகும் சம்ப்ரிதி யாதவ். 24 வயதான சம்ப்ரிதி ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு தான் தற்போது கூகுள் நிருவனத்தின் 1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்த கனவு வேலையானது அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. இதற்காக கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார். பலத்த முயற்சியையும் எடுத்துள்ளார்.

50 இண்டர்வியூக்கள்
 

50 இண்டர்வியூக்கள்

இது குறித்து ஆங்கில மீடியாக்களுக்கு சம்ப்ரிதி அளித்த பேட்டியில், நான் இண்டர்வியூவின் போது மிக பதற்றமாக உணர்ந்தேன். எனினும் எனது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என்னை சிறப்பாக செயல்பட ஊக்குவித்தனர். பெரிய பெரிய நிறுவனங்களில் நான் கலந்து கொண்ட இண்டர்வியூக்கள் எனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. ஆக பதற்றத்தினை குறைத்து எதிர்த்து போராடுங்கள். நம்பிக்கையுடன் கலந்து கொள்ளுங்கள். கூகுளில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு, 50-க்கும் அதிகமான இடங்களுக்கு இண்டர்வியூ சென்றுள்ளேன் என சம்ப்ரிதி கூறியுள்ளார்.

இலட்சியம் இது தான்

இலட்சியம் இது தான்

உண்மையில் கடினமான உழைப்பு என்பது எப்போதும் கைகொடுக்கும் என்பதை சம்ப்ரிதியின் கதை தெளிவுபடுத்துகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் மே மாதம் கல்லூரி படிப்பினை முடித்த சம்ப்ரிதி, மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட் நிறுவனங்களில் லட்சக் கணக்கில் சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், அவரது இலட்சியம் கூகுள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் அமர வேண்டும் என்பது தான்.

கல்வி

கல்வி

பாட்னாவை சார்ந்த சம்ப்ரிதியின் தந்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி ராமசங்கர் யாதவ். அவரது தாயார் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குநரான சஷி பிரபா ஆகியோருக்குப் பிறந்தவர் தான் சம்ப்ரீத்தி யாதவ். சம்ப்ரிதி டெல்லி டெக்னாலஜி பல்கலைக் கழகத்தில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்.

9 ரவுண்ட் இண்டர்வியூ

9 ரவுண்ட் இண்டர்வியூ

கூகுளில் 9 ரவுண்ட் இண்டர்வியூ நடந்த நிலையில், அதில் வெற்றிகரமாக முடித்த நிலையில் தான், சம்ப்ரிதி கேட்ட சம்பளத்தினையும் கூகுள் நிறுவனம் கொடுத்துள்ளது.

உண்மையில் ஐடி துறையில் மட்டும் அல்ல, எல்லா துறைகளிலுமே திறமைக்கான அடையாளம் நிச்சயம் இருக்கும். அதனை நாம் தான் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் உங்களுக்கான சரியான அங்கீகாரம் என்பது கிடைக்கும். ஏதோ வேலைக்கு போனோமா? சம்பளம் கிடைத்ததா என்று இல்லாமல், கற்றுக் கொள்ளுங்கள், கடினமாக உழையுங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியை வாரிக் கொடுக்கும்.

நீங்க என்ன சொல்றீங்க? உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google கூகுள்

English summary

After rejection from 50 interviews, sampriti yadav bags Rs.1 crore job at google

After rejection from 50 interviews, sampriti yadav bags Rs.1 crore job at google/ரூ.1 கோடி சம்பளம்.. காதலர் தினத்தில் கூகுளில் காலடி வைக்கும் சம்ப்ரிதி.. !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.