Flipkart சலுகை: ரூ. 57,990 லேப்டாப்பை வெறும் ரூ. 18,940-க்கு வாங்க ஒரு சூப்பர் வாய்ப்பு

ஃபிளிப்கார்ட்டில் நேற்று, அதாவது பிப்ரவரி 12 முதல் கிராண்ட் கேட்ஜெட் டேஸ் விற்பனை என்ற ஒரு புதிய சேல் தொடங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவில், இந்த சேலில் கிடைக்கும் லெனோவா லேப்டாப்பின் டீல் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த விற்பனையின் மூலம், அட்டகாசமான இந்த லேட்ப்டாப்பை அதன் அசல் விலையான 57,990 ரூபாய்க்கு பதிலாக வெறும் 18,940 ரூபாய்க்கு வாங்கலாம். 

லெனோவா லேப்டாப்களை மிக மலிவான விலையில் வாங்கலாம்

லெனோவோவின் Lenovo IdeaPad 3 Thin and Light Laptop சந்தையில் ரூ.57,990க்கு கிடைக்கிறது. ஆனால் பிளிப்கார்டில் இந்த லேப்டாப் 32% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.38,990க்கு விற்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இந்த லேப்டாப்பை இன்னும் மலிவாகவும் வாங்க முடியும். 

இந்த லேப்டாப் வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்ட் கொண்டு பணம் செலுத்தினால், 5%, அதாவது ரூ.1,950, கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் லேப்டாப்பின் விலை ரூ.37,040 ஆக குறையும்.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள் 

பரிமாற்ற சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பிளிப்கார்டின் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதில் உங்கள் பழைய லேப்டாப்பிற்கு ஈடாக இந்த லேப்டாப்பை வாங்கினால் ரூ.18,100 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.57,990க்குப் பதிலாக ரூ.18,940க்கு இந்த லேப்டாப்பை வாங்க முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த டீலில் வாடிக்கையாளர்கள் ரூ.39,050 தள்ளுபடி பெறலாம்.

லெனோவா ஐடியாபேட் 3 லேப்டாப்பின் அம்சங்கள்

இந்த லெனோவா கோர் i3, 10th Gen லேப்டாப் விண்டோஸ் 11 ஹோமில் பணிபுரிகிறது. இது மிகவும் மெல்லியதாகவும், இலகுவாகவும் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த லேப்டாப்பில், நீங்கள் 15.6-இன்ச் எஃப்.எஹ்.டி ஆண்டி-க்ளேர் டிஸ்ப்ளே, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் மற்றும் ஒரு முறை சார்ஜில் 11 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப் ஆகியவை கிடைக்கும். கார்டு ரீடர், யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றுடன், 720 பிக்சல்கள் கொண்ட பிரைவஸி ஷட்டர் வெப்கேமையும் இதில் வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் இதில், வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வருட ஆன்-சைட் வாரண்டி மற்றும் ஒரு வருட டொமஸ்டிக் வாரண்டியும் கிடைக்கும். 

இதுபோன்ற இன்னும் பல சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள, வாடிக்கையாளர்கள் பிளிப்கார்டின் இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிடலாம். பிளிப்கார்டின் இந்த விற்பனை பிப்ரவரி 16 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.