IPL 2022 மெகா ஏலம் இரண்டாம் நாள் முக்கிய அம்சங்கள்: நேரலையில் எங்கு எப்போது காணலாம்?

ஐபிஎல் மெகா ஏலத்தின் தொடக்க நாளில், இந்திய வீர்ரகளான இஷான் கிஷன் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காட்டில் பண மழை பொழிந்தது. இவர்களது திறமைக்கு கிடைத்த பரிசாக, இந்த வீரர்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டனர். ஐ.பி.எல் ஏலத்தின் முதல் நாளில், திறன் படைத்த இந்திய வீரர்களுக்கு பெரும்பாலான அணிகள் அதிக பணம் செலவழிக்கத் தயாராக இருந்ததை காண முடிந்தது. 

சனிக்கிழமை (பிப்ரவரி 12) தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடி வழங்கியது. எனினும், அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக ரூ. 15.25 கோடியை வாரி வழங்கியது. முதல் நாள் ஏலத்தில், அணி உரிமையாளர்கள் ஒட்டுமொத்த செலவினங்களில் விவேகத்தைக் காட்டினர். எனினும், திறன் படைத்த வீரர்களுக்காக தங்கள் பணப்பையை திறக்க யாரும் தயங்கியதாகத் தெரியவில்லை. 

அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால், நேற்று 20 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கான ஏலம் நடந்தது. இந்த ஏலத்தின் பெரும்பாலான பயனாளிகள் இந்திய டி20 டாப் கிளாஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 12.25 கோடி ரூபாய்க்கு ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தனர். டெல்லி கேபிடல்ஸ் ரூ. 10.75 கோடி கொடுத்து பல்முனை திறமை கொண்ட ஷர்துல் தாக்கூரை தங்கள் அணியில் சேர்த்தனர். 

மூன்று முக்கிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களான அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரை வாங்க யாரும் முன்வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) விரைவுபடுத்தப்பட்ட ஏலத்தில் (ஆக்சிலரேட்டட் பிட்டிங்) இவர்கள் மீண்டும் ஏலம் விடப்படுவார்கள். 

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர் 

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
ஐபிஎல் 2022 ஏலம்: தேதிகள் என்ன?

பிப்ரவரி 12 மற்றும் 13 

ஐபிஎல் 2022 ஏலம் எங்கு நடைபெறுகிறது?

ஐபிஎல் 2022 ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2022 ஏலத்தை டிவியில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் எப்படி, எங்கே பார்ப்பது?

ஐபிஎல் 2022 ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் காணலாம். 

ஐபிஎல் 2022 ஏலத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

ஐபிஎல் 2022 ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் அனைத்து சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் நேரடி கவரேஜுக்கு நீங்கள் https://zeenews.india.com/tamil-ஐக் காணலாம். 

ஐபிஎல் 2022 ஏலத்தில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளையும் சேர்த்து, ஐபிஎல் 2022 இல் உள்ள மொத்த அணிகளின் எண்ணிக்கை 10 ஐ எட்டியுள்ளது. அனைத்து 10 அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்.

ஐபிஎல் 2022 ஏலத்திற்கு எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?

ஐபிஎல் 2022 ஏலத்தின் போது, 228 கேப்ட், 365 அன்கேப்ட் 7 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என 600 கிரிக்கெட் வீரர்கள் ஏல செயல்முறையில் பங்கெடுப்பார்கள். இவர்களில் 20 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 78 வீரர்கள் சனிக்கிழமை ரூ.388 கோடிக்கு விற்கப்பட்டனர்.

மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.