அகிலேஷ் யாதவ் பலவீனமாகக் கூடாது.. – உத்தரப்பிரதேசத்தில் ‘பெரிய ப்ளான்’ போடும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: சமாஜ்வாதி கட்சி எந்த இடத்திலும் பலவீனமாகிவிடக்கூடாது என்றே திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி முதற்கட்டத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
11 வருடத்தில் 961 விபத்து! காவு வாங்கும் தொப்பூர்! இனி அஞ்ச வேண்டாம் – செந்தில்குமார் MP குட்நியூஸ்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மம்தா பானர்ஜி
உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அப்போது, “பெரிய ஆர்வத்தில்” அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை என திரிணாமுல் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

சமாஜ்வாதி
அப்போது, ”உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எந்த இடத்திலும் பலவீனமடைவதை நான் விரும்பாததால், திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. முதல் கட்டத்தில், அகிலேஷ் கட்சி 57 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாரணாசி
மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து மீண்டும் உத்தரப்பிரதேசம் செல்கிறார் மம்தா.
வாரணாசியில் வரும் மார்ச் 3ம் தேதி பேரணியில் கலந்து கொள்வதற்காக உ.பி.க்கு செல்கிறார் மம்தா. இந்திய அளவில் தன்னை ஒரு பெரும் தலைவராக காட்டிக்கொள்ளவே மேற்கு வங்கம் தாண்டி மம்தா பிரசாரம் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ்
”காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளை கூட்டணி வைக்க கேட்டுக்கொண்டேன். அவர்கள் கேட்கவில்லை. காங்கிரஸ் அதன் வழியில் செல்லலாம், நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். பாஜக தலைமையிலான மத்திய அரசால் நாட்டின் அரசியலமைப்பு இடிக்கப்பட்டுவிட்டது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆருடனும் பேசியதாகவும், “கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றும் கூறினார்.