இந்த தேதியில் அறிமுகமாகிறது மலிவான 5G iPhone; அம்சங்கள் அற்புதம்

புதுடெல்லி: ஆப்பிள் தனது வசந்த நிகழ்வை மிக விரைவில் நடத்த உள்ளது, இதில் இதுவரை இல்லாத மலிவான 5ஜி ஐபோன் அறிமுகப்படுத்தப்படும், இது ஐபோன் எஸ்இ 3 அல்லது ஐபோன் எஸ்இ + என்று அழைக்கப்படலாம். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தில் வசந்த நிகழ்வு நடைபெறும். அதாவது, ஐபோன் எஸ்இ 3 அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம். தற்போது போனில் உள்ள அனைத்து தகவல்களும் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐபோன் எஸ்இ 3 இன் விலை, வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை அறிந்து கொள்வோம்…

ஐபோன் எஸ்இ 3 இன் இந்திய விலை
ஐபோன் எஸ்இ 3 இன் விலை சுமார் ரூ.23,000 ஆக இருக்கலாம் என்று தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சாதனம் இந்தியாவில் இவ்வளவு குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படாது என்பது உறுதி. ஐபோன் எஸ்இ 2020 நாட்டில் ரூ. 39,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, ஐபோன் எஸ்இ 3 ரூ.45,000க்குள் இந்தியாவில் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

ஐபோன் எஸ்இ 3 வெளியீட்டு தேதி
ஐபோன் எஸ்இ 3 ஆனது அப்பிள் இன் ஸ்பிரிங் நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வரவிருக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த அறிவிப்பையும் ஆப்பிள் இன்னும் வழங்கவில்லை. கடந்த ஆண்டு, ஆப்பிள் வசந்த நிகழ்வு ஏப்ரல் மாதத்தில் நடந்தது. அதன்படி இவ்வருடமும் அதே நேரத்தில் இந்த நிகழ்வை நடத்தலாம் என நம்பப்பட்டது. இருப்பினும், இந்த நிகழ்வு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என்று மார்க் குர்மன் கூறுகிறார். எனவே, ஐபோன் எஸ்இ 3 அதே தேதியில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மேக்ஸ் மற்றும் ஐபாட்களுக்கான புதிய மென்பொருளை வெளியிடலாம்.

ஐபோன் எஸ்இ 3 அம்சங்கள்
அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2022 அல்லது ஐபோன் எஸ்இ 3 மாடல் ஆனது 5ஜி ஆதரவை பெறும் என்று வதந்தி பரவுகிறது. மேலும் அது 4.7-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை, அதாவது வழக்கம் போல சிறிய ஸ்க்ரீன் வடிவமைப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். ஆனால் வரவிருக்கும் எஸ்இ மாடல் ஆனது லேட்டஸ்ட் ஐபோன் 13 சீரீஸை இயக்கும் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் சக்தியூட்டப்பட அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம், லேட்டஸ்ட் ஜென் ஐபாட் ஏர் மாடல்களும் 5ஜி ஆதரவை பெறலாம் என்று கூறப்படுகிறது. அதன் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் அவைகள் ஆப்பிள் வடிவமைத்த புதிய சிப்செட்களை பேக் செய்வதை நாம் பார்க்கலாம்.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.