ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒன்று. மற்ற உரிமையாளர்களின் வியூகத்தை உடைத்து, உத்திகளைத் தகடுபொடியாக்கி, டெல்லி கேப்பிடல்ஸ் தங்கள் அணிக்கு நல்ல வீரர்களை தேர்வு செய்து உள்ளது.  டெல்லி அணியின் இணை உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி இதனை செய்து காட்டினார். டெல்லி கேபிடல்ஸிற்கான அவரது அற்புதமான ஏல யுத்தியால் மற்ற அணிகள் திணறின. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளை நல்ல வீரர்களை எடுக்க விடாமல் விலையை ஏற்றிவிட்டார்.  இதன் காரணமாக மற்ற அணிகளும் சில நல்ல வீரர்களை எடுக்க முடியாமல் போனது. 

 

மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK

யார் இந்த கிரண் குமார் கிராந்தி?

GMR-ன் CEO & MD கிரண் குமார் கிராந்தி டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தில் வழக்கமாக இருப்பவர். சமீபத்திய சீசன்களில், டெல்லிகாக ஒரு நல்ல அணியை உருவாக்க நிர்வாகத்தின் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். ஐபிஎல் 2022 ஏலத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.  நல்ல வீரர்களை தங்கள் அணியில் எடுக்க டெல்லி பல திட்டங்களை தீட்டியது.  மேலும்,  சில ஸ்மார்ட் ஆனா வேலைகளையும் செய்தது.  டேவிட் வார்னரை தங்கள் அணியில் எடுத்தது தான் கிரண் குமாரின் தந்திரம்.   வெறும் 6.25 கோடி ரூபாய்க்கு அவரைப் ஏலத்தில் எடுத்தது டெல்லி.   இதன் மூலம் பிருத்வி ஷாவுடன் ஒரு திறமையான தொடக்க வீரர் டெல்லிக்கு கிடைத்துள்ளார். 

கிராந்தி 6 வெவ்வேறு நிறுவனங்களின் தலைவராக இருந்து தற்போது ஜிஎம்ஆர் குழுமத்தின் இணைத் தலைவராகவும், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இணை-நிர்வாக இயக்குநராகவும், ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.  அவர் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவராகவும், இளம் தலைவர்கள் அமைப்பின் (இந்தியா) உறுப்பினராகவும், மேலும் 16 நிறுவனங்களின் குழுவிலும் உள்ளார்.  கடந்த காலத்தில் கிராந்தி மன்றத்தின் மொண்டியல் டி எல்’எகனாமியின் உறுப்பினராக இருந்தார்.  உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தற்போது, ​​டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக இருந்து, அணியின் தலைமை நிர்வாகமாக செயல்படுகிறார். மெகா ஏலத்தில் கிரண் குமாரின் சிறந்த ஏல திட்டத்திற்காக இணையத்தில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.  அதே சமயத்தில் மற்ற அணிகளின் ரசிகர்கள் அவரை திட்டியும் வருகின்றனர்.  ஏலத்தில் ஒரு வீரரின் மதிப்பை ஏற்றிவிட்டு கடைசியில் அதில் இருந்து நழுவி மற்ற அணிகளின் பணத்தை காலி செய்ததில் இவரின் பங்கு தான் முக்கியமானது.  

dc

IPL 2022 ஏலத்தில் DC-ல் வாங்கப்பட்ட வீரர்களின் இறுதி பட்டியல்:
 

டேவிட் வார்னர் (ரூ 6.25 கோடி)
மிட்செல் மார்ஷ் (ரூ 6.50 கோடி)
ஷர்துல் தாக்கூர் (ரூ 10.75 கோடி)
முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ 2 கோடி)
குல்தீப் யாதவ் (ரூ 2 கோடி)
அஸ்வின் ஹெப்பர் (ரூ 20 லட்சம்)
சர்பராஸ் கான் (ரூ 20 லட்சம்)
கமலேஷ் நாகர்கோடி (ரூ 1.10 கோடி)
கேஎஸ் பாரத் (ரூ 2 கோடி)
மந்தீப் சிங் (ரூ 1.10 கோடி)
கலீல் அகமது (ரூ 5.25 கோடி)
சேத்தன் சகாரியா (ரூ 4.2 கோடி)
யாஷ் துல் (ரூ 50 லட்சம்)
ரிபால் படேல் (ரூ 20 லட்சம்)
ரோவ்மேன் பவல் (ரூ 2.8 கோடி)
பிரவின் துபே (ரூ 50 லட்சம்)
லுங்கி என்கிடி (ரூ 50 லட்சம்)
டிம் சீஃபர்ட் (ரூ 50 லட்சம்)
விக்கி ஆஸ்ட்வால் (ரூ 20 லட்சம்)

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.