டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் தமிழ் டிரைலர்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி எட்டாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை சாம் ரைமி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஜேட் பார்ட்லெட் மற்றும் மைக்கேல் வால்ட்ரான் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பிகே தயாரிக்கும் இந்த படத்தில் பெனடிக்ட் கம்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சென், பெனடிக்ட் வோங், ரேச்சல் மெக்காடம்ஸ், சிவெட்டல் எஜியோஃபர் மற்றும் ஸோகிட்ல் கோம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் படிக்க | ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி!

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் என்பது மார்வெல் ஸ்டுடியோவின் தயாரிப்பாகும், அதன் தாய் டிஸ்னி உலகளவில் விநியோகத்தைக் கையாளுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மே 6, 2022 அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கார்த்தியின் ’சர்தார்’ படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.