பாலிவுட்டை கலக்கிய தென்னிந்திய படம் – ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்

அண்மையில் பேட்டி கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய திரைப்படங்களுக்கான மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது பாகுபாலி எனக் கூறினார். தென்னிந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் படங்கள் பாலிவுட் மார்கெட்டுக்கு சென்றாலும், மொழி அடிப்படையிலான தடையை அவர்களின் படங்கள் உடைக்கவில்லை என தெரிவித்தார்.  

மேலும் படிக்க | ஆறு மொழிகளில் ஜூலை 1 அன்று வெளியாகும் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”

தொடர்ந்து பேசிய அவர், “ஓடிடி ப்ளாட்பார்ஃபார்கள் வருகைக்கு பின்னர் மொழிகளைக் கடந்த நல்ல படங்களை மக்கள் தேர்ந்தெடுத்து பார்க்கின்றனர். சப்டைட்டில்கள் கொடுக்கப்படுவது மிகப்பெரிய ப்ளஸ். மொழி தடையால் ரஜினி, கமல் ஆகியோருக்கான சரியான அங்கீகாரம் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. அவர்களை லெஜண்ட்ஸ் என்ற அடிப்படையில் மட்டும் பார்தார்கள். ஆனால், பாகுபாலி திரைப்படத்தின் ரிலீஸூக்குப் பிறகு, மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. அதனை நானே கண்கூடாக பார்த்தேன். 

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களுக்கு ஹிந்தி மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. ஹிந்தி திரைத்துறைக்கும், தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் பாலமாக இருந்த ஒரு படம் என்றால் அது நிச்சயம் பாகுபலி. அதன்பிறகே தென்னிந்திய படங்களில் பாலிவுட் பிரபலங்களும் நடிக்க விரும்புகின்றனர். ஆர்ஆர்ஆர் படம் அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்கு விஜய் தேவரகொண்டா சென்றிருக்கிறார். வரும் காலங்களில் தென்னிந்திய படங்களின் மார்க்கெட்டும் உயரும். நடிகர்களும் மொழிகளைக் கடந்து கால்பதிப்பார்கள்” என பல்வேறு கருத்துகளை வெளிப்படையாக பேசியுள்ளார். 

ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நடிக்கிறார். மேலும், இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெஸ்ட் செல்லர் அமேசான் பிரைமில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | மேலும் படிக்க: இயக்குனராக அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்கள் -ஒரு பார்வை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.