பிப். 17க்கு பிறகு பிரசாரத்திற்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. களத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28,660 பேரும் போட்டியிருகின்றனர். தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களும் நூதன முறைகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – இணையத்தில் வைரலாகும் விண்ணப்பம்!

இந்நிலையில், தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையம்
தற்போது தேர்தல் பரப்புரை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசியல் கட்சிகள் பிப் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்குள் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரசாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.