பெண் யானையை தேடி வந்த ஆண் யானைக்கு நடந்த விபரீதம்: Video

உணவு தேடி காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி காப்பி தோட்டத்துக்கு புகுந்த பெண் யானை படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அந்த யானையை தேடி வந்த ஆண் காட்டுயானை காப்பி தோட்டத்தின் உள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் குசால்நகர் பகுதியில் அடர் வனப் பகுதி உள்ளது. இதற்கு சரிசமமாக அந்தப் பகுதியில் காப்பி தோட்டங்கள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் அவ்வப்போது உணவு தேடி இரவு நேரங்களில் காபி தோட்டங்களுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நஞ்சராயன் பட்டன பகுதியிலுள்ள ஒரு காபி தோட்டத்திற்கு நுழைந்த 7 வயது பெண் காட்டு யானை அங்கு எதிர்பாராதவிதமாக வலது காலுக்கு அடிபட்டு படுகாயமடைந்து. தோட்டத்தில் படுகாயமடைந்து நகர முடியாமல் கிடந்த யானையை பார்த்த ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்

அங்கு விரைந்த வனத்துறையினர் படுகாயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் காட்டு யானையை தேடி ஆண் யானை காபி தோட்டத்துக்கு புகுந்துள்ளது. அந்த யானை எதிர்பாராதவிதமாக காபி தோட்டத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் விழுந்தது.

குட்டையில் விழுந்த யானை வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் வனத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி ஜேசிபி எந்திரம் மூலம் காட்டு யானையை வெளியேற்றினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.