மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு இன்றுமுதல் தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்டது. 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் இதனையடுத்து 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு கலந்தாய்வும் நடைபெற்றது. மேலும் 30-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது.இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு இன்றுமுதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் இன்று மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வர தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஓராண்டிற்கு மேலாக ஏற்பட்ட கொரோனா, நீட் தேர்வு போன்ற பல்வேறு காரணங்களால் நீண்ட இடைவெளிக்கு பின்னர்  மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தருகின்றனர். எனவே மாணவர்களின் ஆவணங்கள் முழுமையாக பரிசோதித்த பின்னர் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.