மிகவும் மலிவான விலையில் Vivo 5G; பிளிப்கார்ட்டில் கடைசி வாய்ப்பு

புதுடெல்லி: மொபைல் போனான்சா விற்பனை பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது, இன்று விற்பனையின் கடைசி நாளாகும். இன்று காதலர் தினம் முன்னிட்டு உங்கள் பார்ட்னருக்கு ஸ்மார்ட்போன் பரிசளிக்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த விற்பனையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவாக வாங்க முடியும். விவோ கடந்த மாதம் விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதன் பின் பேனல் நிறம் மாற்றப்பட்டது. அதன்படி தற்போது பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​விவோ வி23 5ஜி ஸ்மார்போனில் 22 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ வி23 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
விவோ வி23 5ஜி இன் அறிமுக விலை ரூ.34,990 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.29,990க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறைகிறது.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ வி23 5ஜி வங்கி சலுகை
விவோ வி23 5ஜி இல் சிட்டி வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.750 கிடைக்கும், அதைத் தொடர்ந்து 3% தள்ளுபடியும் கிடைக்கும். அதாவது, போனில் ரூ.900 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனில் மொத்தம் ரூ.1,650 தள்ளுபடி கிடைக்கும். வங்கி தள்ளுபடிக்குப் பிறகு, போனின் விலை ரூ.28,340 ஆக ஆகும்.

பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ வி23 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை
விவோ வி23 5ஜி இல் ரூ. 15,500 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த பன்பர் தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.15,500 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழு எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற முடிந்தால், போனின் விலை ரூ.12,840 ஆக ஆகும். அதாவது ரூ.34,990 விவோ வி23 5ஜி போனை ரூ.12,840க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.