ராமானுஜரின் போதனைகள் இந்தியர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

ராமானுஜரின் போதனைகள் இந்தியர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஹைதராபாத்: வைணவ ஆச்சாரிய குருவான இராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில், 120 கிலோ எடை கொண்ட முழுவதும் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இராமானுஜரின் சிலையை இன்று திறந்து வைத்து நாட்டுடைமை ஆக்கினார். இராமானுஜரின் போதனைகள் என்பது சாஸ்திரங்களுக்குள் மட்டும் அடங்கி விடாமல், இந்தியர்களின் பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைணவ ஆச்சாரிய குருவான இராமானுஜர், கி.பி.1017 ஆண்டு பிறந்து 120 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். விசிஷ்டாத்வைதம் என்னும் வைணவத் தத்துவத்தை உருவாக்கி அதை நாடு முழுவதும் பரப்பியவர், இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், பின்னர் வந்த திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுஜர் நூற்றந்தாதியை, மணவாள மாமுனிகள் சேர்த்து 3892 பாடல்களாக இருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை 4000ஆக ஆக்கினார்.

President Ramnath Govind unveiled a 120-kg gold statue of Ramanujar

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இராமானுஜருக்கு நாடுமுழுவதும் உள்ள வைணவ கோயில்களில் சிலைகள் இருந்தாலும், புத்தர், மஹாவீரர் போன்ற பிற சமயத்தை உருவாக்கியவர்களுக்கு உள்ளது போல் சிலை இல்லையே என்ற கவலை வைணவ பக்தர்களின் மனதில் இருந்தது. அவர்களின் மனக்குறையை போக்கும் வகையில், இராமானுஜருக்கு 216 அடி உயர சிலையை அமைக்க திட்டம் 2014ஆம் ஆண்டில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, சிலையை உருவாக்கத் தேவைப்படும் சுமார் 1000 கோடி ரூபாய் நிதியானது முழுக்க முழுக்க நன்கொடைகள் மூலம் திறட்டப்பட்டு, தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான முச்சிந்தல் என்ற இடத்தில 45 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 216 அடியில் ஐம்பொன்னால் ஆன சிலை உருவாக்கப்பட்டது.

சமத்துவச் சிலை என்று அழைக்கப்படும் இச்சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்து நாட்டுமை ஆக்கினார். இதனையடுத்து இச்சிலையை பார்வையிட நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

President Ramnath Govind unveiled a 120-kg gold statue of Ramanujar

இதற்கிடையில், மற்றொரு சிறப்பாக இராமானுஜர் வாழ்ந்த வயதைக் குறிக்கும் வகையில், 120 கிலோ எடையில் முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்டது. 216 அடி உயரமுள்ள சிலை அமைந்துள்ள பீடத்தின் கர்பக்கிரகத்தில் இச்சிலை உருவாக்கப்பட்டது. இச்சிலையை திறந்துவைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் சந்திரசேகரராவ், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் பல உயரதிகாரிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து ஹெலிகாஃப்டர் மூலம் அங்கிருந்து புறப்பட்ட ராம்நாத் கோவிந்த், இராமானுஜரின் 216அடி உயர சிலை அமைந்துள்ள முச்சிந்தலுக்குச் சென்றார். அங்கு அவரை பூர்ண கும்ப மரியாதையுடன் சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வரவேற்றனர். அதன் பின்பு, ராம்நாத் கோவிந்த் 216 அடி உயர சிலையை பார்வையிட்டு நெகிழ்ச்சியடைந்தார்.

பின்னர், இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவு கூறும் வகையில், 120 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து நாட்டுடைமை ஆக்கினார். கூடவே, அங்கு உருவாக்கப்பட்ட 108 திவ்யதேச கோயில்களையும் பார்வையிட்டார்.

சிலையைத் திறந்து வைத்த பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், மகான் இராமானுஜரின் தங்கச் சிலையை திறந்து வைத்து நமது நாட்டுக்கு அர்பணித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதை என்னுடைய பாக்யமாகவே கருதுகிறேன். இராமானுஜரின் போதனைகள் என்பது சாஸ்திரங்களுக்குள் மட்டும் அடங்கி விடாமல், இந்தியர்களின் பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே உள்ளன.

President Ramnath Govind unveiled a 120-kg gold statue of Ramanujar

இராமானுஜரின் சிலை அமைந்துள்ள இந்த இடம் உண்மையிலேயே ஒரு சமத்துவ நிலமாகும். தென்னிந்தியாவில் ராமானுஜர் தொடங்கி வைத்த சமத்துவப் போராட்டம் வட இந்தியா முழுவதும் பரவியது. அதற்கு உதாரணமாக அம்பேத்கார் கூட ராமானுஜரின் சமத்துவப் போராட்டமே தன்னை ஊக்குவித்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைணவ ஆழ்வார்களின் முக்கியத்துவத்தை இராமானுஜர் இந்த உலகிற்கு எடுத்துரைத்தார். அவரைப் பின்பற்றியே மகாத்மா காந்தியடிகளும் வாழ்ந்தார். அனைவருக்கும் கடவுளை வணங்கத் தகுதி உள்ளது. தற்போது நாட்டில் புது சரித்திரம் தொடங்கியுள்ளது, என்று பேசினார்.

 சீனா சார்பாக மாறுகிறதா புதிய இந்தியா? ராமானுஜர் சிலை தொடர்பாக மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி சீனா சார்பாக மாறுகிறதா புதிய இந்தியா? ராமானுஜர் சிலை தொடர்பாக மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

English summary
President Ramnath Govind, who was attending the 1000th birth anniversary celebrations of Vaishnava Guru Ramanujar, today unveiled a 120-kg gold statue of Ramanujar in the suburbs of Hyderabad.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.