விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கனி ( எ ) முத்தையா மரணம் அடைந்ததை அடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மேகநாத நெட்டி அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தே்தலில் பதிவாகும் வாக்குகள் பிப். 22 அன்று 268 மையங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கனி (எ) முத்தையா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எனவே 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். த்தையா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
