அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் – அபு இப்ராஹிம் அல் குரேஷி யார்?

வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பைடன், “நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷியை கொன்றுள்ளோம். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் எல்லை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெளிக்கொணரும் திறனுக்கு ஒரு சான்றாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க நான் உறுதியாக உள்ளேன். இந்த நாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி?

சிரியா மற்றும் இராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இராக் கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதன் முதல்கட்டமாக, சில ஆண்டு களுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் சுருக்கி கொண்டனர். சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதன் தலைவராக இருந்து வந்தவர் இராக்கை சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதி. இவரை கடந்த 2019ல் டிரம்ப் தலைமையில் இருந்த அமெரிக்க அரசின் உத்தரவின் இதே அமெரிக்க துருப்பு படைகள் கொன்றது. அவரின் மரணத்துக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர் தான் இந்த அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் மற்ற ஜிஹாதிகளால் மிகவும் மதிக்கப்பட்டுவந்த ஒரு தலைவர் இந்த அல் குரேஷி. மேலும், இவரை அந்த அமைப்பினர் ‘அறிஞர்’ என்றும் ‘போர்களின் அரசன்’ என்றும் அழைத்துவந்துள்ளனர். இவர் இதற்குமுன்பே, அமெரிக்கா படைகள் உடன் நடந்த சண்டைகள் பலவற்றில் பங்கேற்ற நபர் என்பதால், அமெரிக்க ராணுவம் குறித்து அதிகமாக அறிந்த நபர் என்றும் இவரை சொல்கின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் சட்டத் திட்டத்தின் நீதிபதிகளில் ஒருவரான இவர், அல் பாக்தாதி இறப்புக்கு முன் பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாதவராக இருந்துள்ளார். மேலும் அல் பாக்தாதி இறப்புக்கு பிறகு அவரின் வலதுகரம் போல இருந்த அப்துல்லா கரதாஷ் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் அதிகம் அறிமுகம் இல்லாத அல் குரேஷி தலைவரானார். தலைவரானதுமே தன்னுடைய அதிரடியை தொடங்கினார் அல் குரேஷி. பொறுப்பேற்ற அன்றே அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை, “அவர் கோட்டிக்கார கிழவன்” என்று வம்பிழுத்ததோடு, “அல் பாக்தாதியைக் கொன்றுவிட்டதாக மகிழ்ச்சிகொள்ள வேண்டாம். இதற்கு நாங்கள் பழிவாங்குவோம்” என்று சபதமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.