காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..!

பிப்ரவரி 14 உலகம் முழுவதும் மக்கள் காதலில் திழைத்து இருக்கும் நிலையில் இந்தியாவில் ரோஜா விற்பனையாளர் பண மழையில் நனைந்து உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக உலக மக்கள் 2 வருடம் முழுமையாக வீட்டிலேயே முடங்கிடந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தும், ஒமிக்ரான் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!

இதனால் இந்த ஆண்டு காதலர் தினம் மிகப்பெரிய அளவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதற்கு சான்று இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ரோஜா தான்.

 காதலர் தினம்

காதலர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து காதலர் தினத்திற்காக ரோஜா மலர்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். உலகில் அனைத்து நாடுகளிலும் ரோஜா மலர்களுக்கு டிமாண்ட் இருக்கும் காரணத்தினால் இந்தியாவில் இருந்தும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின கொண்டாட்டத்திற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

இந்நிலையில் இந்த ஆண்டு பெங்களுர் சர்வதேச விமான நிலையமான கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலக நாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி அளவு கடந்த வருடத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என பெங்களூர் விமான நிலையம் கார்கோ தெரிவித்துள்ளது.

  5.15 லட்சம் டன்
 

5.15 லட்சம் டன்

பெங்களூர் விமான நிலையத்தின் கார்கோ பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு மட்டும் 5.15 லட்சம் டன் அளவிலான ரோஜா மலர்கள் 25 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் 2.7 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் விமான நிலையத்தின் கார்கோ பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு மட்டும் 5.15 லட்சம் டன் அளவிலான ரோஜா மலர்கள் 25 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் 2.7 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா தொற்று சரிவு

கொரோனா தொற்று சரிவு

2022ல் எப்போதும் இல்லாத அளவிற்கு ரோஜா மலர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என பெங்களூர் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த டிமாண்ட் அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உலகம் முழுவதும் குறைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் தான்.

 காதலர் தின கொண்டாட்டங்கள்

காதலர் தின கொண்டாட்டங்கள்

கோவிட் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதாலும், கோவிட் வேக்சின் அதிகரித்துள்ள காரணத்தாலும் காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளது. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு 3.15 லட்சம் டன் ரோஜாவும், உலக நாடுகளுக்கு 2 லட்சம் டன் ரோஜா மலர்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

 பெங்களூர் டாப்பு

பெங்களூர் டாப்பு

மேலும் இந்தியாவிலலேயே பெங்களூர் விமான நிலையம் தான் இந்த வருடத்தின் மிகப்பெரிய ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்த விமான நிலையமாக உள்ளது. பெங்களூரில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி, சண்டிகர், வெளிநாட்டில் சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன், ஆம்ஸ்டர்டாம், குவைத், ஆக்லாந்து, பெய்ரூட், மணிலா, மஸ்கட் மற்றும் துபாய் ஆகிய நகரங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Valentine’s Day: Bengaluru Airport shipped 5.15 lakh ton rose to 25 destinations

Valentine’s Day: Bengaluru Airport shipped 5.15 lakh ton rose to 25 destinations காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.