சாமானியர்கள் விரும்பும் அஞ்சலகத்தின் RD திட்டம்.. எப்படி தொடங்குவது.. டெபாசிட்?

பொதுவாக அஞ்சலக திட்டங்கள் என்றாலே சாமானியர்கள் விரும்பும் ஒரு திட்டமாக இருந்து வருகின்றது. குறிப்பாக அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது மிக விருப்பமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

ஏனெனில் கையில் இருக்கும் குறைவான தொகையினை கூட, இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்ய முடியும்.

3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!

எல்லாவற்றிற்கும் மேலாக சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் அஞ்சலகம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பதால், மிக நம்பிக்கையானதாகவும் பார்க்கப்படுகிறது.

சாமானியர்களுக்கு ஏற்றது?

சாமானியர்களுக்கு ஏற்றது?

இந்த திட்டம் மாத சம்பளதாரர்களுக்கும், சாமானியர்களுக்கும் ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாத மாதம் சம்பளம் வாங்கிய பின்னர் சேமித்து வைக்கலாம். இந்த திட்டத்தினை தொடங்குவதும் மிக எளிது. இதே திட்டங்கள் வங்கிகளில் இருந்தாலும், அஞ்சலகங்களில் வட்டி விகிதம் அதிகம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்கும்போது, ஆதார், பான் கார்டு, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் சேர்த்து, பணம் அல்லது காசோலையை கொண்டும் தொடங்கலாம். நாமினியை நியமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். 2 பேர் சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஆகவும் தொடங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே தொடங்கிய தனி நபர் அக்கவுண்டினையும் ஜாயிண்ட் அக்கவுண்டாக மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகள் பெயரிலும் பாதுகாவலர் உதவியுடன் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.

 எப்படி ஆஃப் லைனில் தொடங்குவது?
 

எப்படி ஆஃப் லைனில் தொடங்குவது?

பயனர்கள் இதற்காக அருகிலுள்ள அஞ்சலகங்களில் சென்று தொடங்கிக் கொள்ளலாம். அஞ்சலகத்திற்கு சென்று ஃபார்மினை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து, டெபாசிட் ரசீதினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதனை ஆன்லைனில் தொடங்கிக் கொள்ளும் வசதி உண்டு.

ஆன்லைனில் எப்படி?

ஆன்லைனில் எப்படி?

ஆன்லைனில் இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்க.. https://ebanking.indiapost.gov.in என்ற இணைதளத்தினை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதில் உங்களது User id மற்றும் password கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். ஐடி பாஸ்வேர்டு இல்லையெனில் இதே பக்கத்திலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.

அதனை லாகின் செய்து கொண்ட பிறகு General Service என்பதை கிளிக் செய்யவும். அதில் மெனுவில் service request என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு service request என்ற ஆப்சனில் new Requests என்ற ஆப்சனை கிளிக் செய்யலாம்.

அதில் RD accounts என்ற ஆப்சனில் Open RD account என்பதை கிளிக் செய்யவும். அது ஒரு புதிய பக்கத்தில் தொடங்கும். தேவையான விவரங்களை சரியாக பதிவு செய்யுங்கள்.

விவரங்கள் நிரப்பட்ட பின்னர் சப்மிட் கொடுக்கவும். நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்காளது Transaction Password என்பதை நிரப்பவும். இதனை கொடுத்து வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்து விட்டால், உங்களது கணக்கு விவரங்கள், முதிர்வு காலம், டெபாசிட் தொகை உள்ளிட்ட பலவற்றையும் சரியாக நிரப்பவும்.

பேமெண்ட் எப்படி?

பேமெண்ட் எப்படி?

பயனாளர்கள் ஆன்லைனில் பணம் டெபாசிட் செய்து கொள்ளலாம். IPPB-ன் லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் ஆர்டி கணக்கிற்கு பணத்தினையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி 5.8% வட்டி விகிதமாக உள்ளது. இந்த திட்டத்தில் கூட்டு வட்டியும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வடைகிறது.

நிரந்தரமாக முடித்துக் கொள்ள முடியுமா?

நிரந்தரமாக முடித்துக் கொள்ள முடியுமா?

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி கணக்கினை 3 வருடத்திற்கு பிறகு முடித்துக் கொள்ளலாம். அப்படி முன் கூட்டியே முடித்துக் கொண்டால் அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் வட்டியை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Post office Recurring deposit account: how to open a/c in online?

Post office Recurring deposit account: how to open a/c in online?/சாமானியர்கள் விரும்பும் அஞ்சலகத்தின் RD திட்டம்.. எப்படி தொடங்குவது.. டெபாசிட் செய்வது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.